இலங்கையின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு!

இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40 முதல் 50கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துக - பப்ரல் !
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்!
அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|