இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 9th, 2020

விவசாயிகளுக்கான விதைகளை குறித்த பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான விவசாய திணைக்களம் மற்றும் மகாவலி பிரதேசங்களிலுள்ள விதை உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

உள்ளுரில் உற்பத்தி செய்யக் கூடிய பயிர்களை பயிரிட்டு இறக்குமதியைக் குறைப்பதற்காக 2020 ஆம் ஆண்டின் பெரும்போகச் செய்கையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம்’ தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.

அதிக அறுவடையைப் பெறல் மற்றும் பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக தரமான விதைகளை விவசாயத் திணைக்களத்திற்கு மட்டும் விநியோகிப்பதற்கு இயலாமையால்,  விவசாயிகளுக்கான விதைகளை குறித்த பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யும் வகையில் மாகாண மற்றும் மாகாணங்களுக்கிடையிலான விவசாய திணைக்களம் மற்றும் மகாவலி பிரதேசங்களிலுள்ள விதை உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Related posts: