இலங்கையின் நிலை மோசமாகலாம் – எச்சரிக்கை விடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!

Monday, April 20th, 2020

கொரோனா வைரஸை தற்போது சமூகத்தில் பரவவிடாமல் தடுத்துவிட்டாலும் எதிர்காலத்தில் அது இலங்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர, கொழும்பின் தற்போதைய நிலை மோசமாகலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் இதுவரை கொழும்பில் இனங்காணப்பட்ட நோயாளரிடம் இருந்து கொரோனா பலருக்கும் பரவியிருக்கலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மறு அறிவித்தல் வரை சட்ட மா அதிபர் திணைக்களம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய தனியார் நிறுவன பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்து.

Related posts: