இலங்கையின் நிலைவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட கலந்துரையாடல்!

Tuesday, April 12th, 2022

இலங்கையின் நிலைவரம் குறித்து,  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக, அதிகாரிகளை மேற்கோள்காட்டி, த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை யுக்ரைன் போர் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: