இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீனா அறிவிப்பு!
Wednesday, January 18th, 2023இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சீனா தொடர்ந்தும் சாதகமான பங்கை வகிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதியளிப்பு பங்காளிகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை நிலைநிறுத்தவும் சீனா உறுதிபூண்டுள்ளது.
அத்துடன், தமது முதலீடு மற்றும் நிதியளிப்புச் சூழலின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பேணவும் இலங்கை சுதந்திரமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இதுவரையான கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான பதில் விரைவில் கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் இனிமேல் யுத்தம் ஏற்படாது - யாழ். கட்டளைத் தளபதி
தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன - களப்பணியாற்ற தயராகுங்கள்...
அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ஜீவன் நாடாளுமன்றில் தெளிவுபடுத்தல் - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரச்ச...
|
|