இலங்கையின் நலன்கள் குறித்த இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் அரை மணித்தியாலம் இடம்பெற்ற குறித்த உரையாடலின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை விஸ்தரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவி மற்றும் கொவிட்-19 தடுப்பு நிவாரணம் ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிம்ஸ்டெக் உள்ளிட்ட வலய நாடுகளுக்கு உட்பட்ட அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதேநேரம் இரண்டு நாடுகளும் முகங்கொடுத்துள்ள கொவிட்-19 அச்சுறுத்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|