இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு!

Thursday, September 28th, 2023

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நேற்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வர்த்தகம் மற்றும் தனியார் துறை சார்ந்த வளர்ச்சியின் இன்றியமையாத கூறுகளான இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் அபிவிருத்திகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தூதுவர் தெரிவித்துள்ளர்

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதற்கும் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜூலி சங் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

20 ஆவது சீர்திருத்தத்தில் தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படும்...
சேவை மூப்பு பாதிக்கப்படாத வகையில் ஓய்வூதியத்துக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளமற்ற வ...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்த...