இலங்கை நெருக்கடி மற்றும் உதவிகள் குறித்து இந்திய வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்!

Monday, June 13th, 2022

இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 18ஆம் திகதி வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கமவுள்ளார்.

ஜெய்சங்கரைத் தவிர, இந்திய வெளியுறவுச் செயலர் மற்றும் இதர MEA அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இந்த சந்திப்பின் போது, பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டின் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் புதுடெல்லி கொழும்புக்கு எப்படி, எவ்வாறான உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்கப்படள்ளது.

நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சிவசேனா ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதி, திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா, பாஜக எம்.பி ராஜ்தீப் ராய் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

முன்பதாக.இலங்கைக்கு இந்தியா பலமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளியாக மாறி வருகிறது. தொற்றுநோய் மற்றும் உரப் பிரச்சினைகளின்போது உதவி தவிர, பல நன்கொடைகளையும் வழங்கியது.

அதனடிப்படையில் ஜூன் 3 அன்று, கொழும்புக்கான உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே 1990 சுவசேரிய அம்புலன்ஸ் சேவைக்கு மொத்தம் 3.3 தொன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கையளித்தார்.

மார்ச் 2022 இல் கொழும்பில் உள்ள சுவசேரியா தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது, அறக்கட்டளை எதிர்கொள்ளும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை குறித்து ஜெய்சங்கருக்கு தெரிவிக்கப்பட்டதாக பாக்லே கூறினார்.

முன்னதாக மே 27 அன்று, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், கொழும்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் 25 தொன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை கையளித்தார்.

இந்த மனிதாபிமான பொருட்கள், நிதி உதவி, அந்நிய செலாவணி ஆதரவு, பொருள் வழங்கல் மற்றும் பல வடிவங்களில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
யாழ் மாநகர சபையின் சுகாதார சீரகேடான கழிவுகள் வேலணை பிரதேசத்தில் அனுமதியின்றி கொட்டப்பட்டதால் சர்ச்சை...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை மு...