இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து மருத்துவ சங்கங்கள் கவலை – உடன் நடைமுறைப்படுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

Sunday, May 9th, 2021

இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் எஸ்எல்எம்ஏ இன்டர்கொலேஜியேற் குழு ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில் ஜனாதிபதியிடம் மருத்துவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை விரைவில் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் கருதுகின்றனர்.

கடுமையான நகர்வுக் கட்டுப்பாடுகள், சோதனைகளை விரிவுபடுத்தல், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் மேலதிக உபகரணங்கள் ஆகியவை அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது..

Related posts: