இலங்கையின் சுற்றுலா, கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம் – கடல் மற்றும் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு!
Thursday, September 15th, 2022இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது..
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான நேபாள தூதுவர் பசு தேவ் மிஸ்ரா கலந்துக்கொண்டுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது இரு நாட்டு இளைஞர்களும் பல்கலைக்கழக கல்வி மற்றும் சுற்றுலாத்துறை வாய்ப்புகளில் இணைவதற்கு இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நேபாள அரசாங்கம் மேற்கொள்ளும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடற்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை கடல் மற்றும் வர்த்தக மையமாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|