இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டு!

2021 ஆகஸ்ட் 20 ஆம் திகதி சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், முழு அளவில் அனைத்து நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக சீனத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும், கோவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் முயற்சிகளுக்குமான சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கொரோனா ஒத்துழைப்பு, மக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள், பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|