இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Wednesday, May 20th, 2020

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக 35 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மொத்தமாக இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட சகல கொரோனா தொற்றாளர்களும் கடற்படை உறுப்பினர்கள் என தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 586 பேராக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்த 569 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 445 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: