இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு உலக நாடுகளின் தூதுவர்கள் பாராட்டு!

Friday, April 17th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களின் நடைமுறை குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் வரவேற்பு வெளியிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச, தூதுவர்களுக்கும் உயர்ஸ்தானிகர்களுக்கும் விளக்கமளித்தார்.

இதன்போது இலங்கைக்கு தமது உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் உறுதியளித்தனர்.

சந்திப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட்ட நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: