இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சி – இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக அர்ஜுன ரணதுங்க மிரட்டல்!

Friday, December 29th, 2023

இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க மிரட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். ரணதுங்கவின் இந்த கருத்து, பலத்த எதிர்பார்ப்பை கிரிக்கெட் சமூகத்திற்குள் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் மீது அர்ஜூன குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமது மன்னிப்பை கோரியிருந்தார்.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் 10 அணிகள் பங்கேற்கும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள்,  ஜனவரி 06 வரை இலங்கையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...
அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் - ஆளு...
இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீ...