இலங்கையின் கள ஆய்வில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள்!

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்படும் சிவில் – இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமெரிக்க படை அதிகாரிகள் குழு கொழும்பு வந்துள்ளது.
தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கிற்கு முன்னதாக இலங்கைக்கு வந்த இந்தக் குழு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியது.
இதன்போது, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சிவில்- இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக இராணுவத் தளபதி விளக்கிக் கூறியுள்ளார்.
Related posts:
முஸ்லிம் தீவிரவாதிகள் மீதான தடை தொடரும் - பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர!
இன, மதம் அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை பதியாதிருக்க தீர்மானம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவ...
147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!
|
|