இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு!

Thursday, May 18th, 2023

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவும் இலங்கையும் தற்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இணைந்து பணியாற்ற, நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவவை வழங்கும் என்றும் வாங் வென்பின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனா உள்ளிட்ட கடன் வழங்குநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் வாங் வென்பின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வளமான கிராமம் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்...
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு!
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையின...