இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவுடன் IMF பேச்சுவார்த்தை – சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவிப்பு!
Sunday, January 15th, 2023சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வட்டமேசை ஊடக உரையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் நிலைத்தன்மை மற்றும் அவர்களின் பங்களிப்புக்கான மார்க்கம் என்ன ஆகிய இரண்டையும், சீனாவுக்கு புரிய வைப்பதில் தாம் ஈடுபட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சாட், சாம்பியா மற்றும் இலங்கை மற்றும் சூரினாம் ஆகிய நாடுகளின் கடனைத் தீர்ப்பதற்கான பாதையை வரையறுக்க சீனாவுடன் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
தாம் சீனாவில் இருந்தபோது, நிதி அமைச்சகம் மற்றும் சீனாவின் மக்கள் வங்கி ஆகிய இரண்டு முக்கிய நிறுவன அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்தார்கள், இதன்போது அவர்களுடன் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் விவாதிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆசியாவின் இந்த போக்கினால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் அண்டைய நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளன. எனினும், சீனா தமது நடவடிக்கைகளில் மெதுவாகவே செயல்படுகிறது என்றும் ஜோர்ஜீயேவா குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதால், ஜி 20 இல் இந்தியாவின் தலைமையை தாம் அதிகம் நம்புவதாக ஜோர்ஜீயேவா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|