இலங்கையின் எதிர்காலம் ஜனாதிபதியின் கையில் – பிரபல சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹெவா!
Friday, December 14th, 2018நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை பிழையானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹெவா தெரிவித்துள்ளார்.
நேற்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி பிழையானது என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பில் எந்த இடத்திலும் பிரதமர் பதவி அல்லது அமைச்சரவை சட்டவிரோதமானது என்று கூறப்படவில்லை.
இந்தநிலையில் புதிய அரசாங்கத்தை நியமிக்கின்ற நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கிறது. இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதேவேளை பிரதமர் பதவியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி சொல்வாராக இருந்தால், அவர் அடுத்தக்கட்டமாக பொதுசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அது எவ்வாறான அடிப்படையில் நிகழும் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|