இலங்கையின் ஊடக சுதந்திரம் எங்கு உள்ளது என்ற கேள்வியை ஆசிரியர்பீடத்திலேயே கேட்க வேண்டும் – பிரதமர்

ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டால் அதை ஊடகங்கள் பல்வேறுவிதமான கருத்துக்களை வெளியிடுகின்றன. இவ்வாறு உறுதியற்றமுறையில் தாம் நினைத்துவாறு செய்திகளை வெளியிடும்போது நாம் எவ்வாறு ஊடக சுதந்திரத்தைப் பற்றி வலியுறுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஊடக மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வு தொடர்பிலான ஆய்வு முடிவின் இறுதி அறிக்கை, செவ்வாய்க்கிழமை லக்ஷ்மன் கதிர்காமர் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –
கடந்த 2003ஆம் ஆண்டு நான் தகவல் அறியும் சட்டமூலத்தை சமர்பித்தேன். அது 13 வருடங்களின் பின்னரே நிறைவேற்றப்படவுள்ளது. என்னால் மீண்டும் வெற்றியடைய முடியாது. உங்களுக்கு அரசியல் தேவைதானா என்றவாறு ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டன. அன்று ஊடகங்களின் கருத்தை கேட்டு செயற்பட்டிருந்தால் என்னால் பிரதமராக வந்திருக்க முடியுமா? என்னை அதிகமாக தூற்றிய தமிழ் ஊடகம் என்றால் அது உதயன் பத்திரிகைதான். 50 ஆண்டுகாலமாக போராடியிருக்கிறேன். எனது இருக்கையை ஊடகங்களால் கூட பிடிக்கமுடியாது. ஊடக சுதந்திரம் தேவையில்லை என்ற அடிப்படையிலேயே ஊடகங்கள் செயற்படுகின்றன. ஆனால், அடிமேல் அடி விழுந்தும் நாம் ஊடக சுதந்திரத்துக்காக பாடுபடுகிறோம். இதை ஊடகவியலாளர்கள் கண்டுகொள்வதில்லை. இலங்கையின் ஊடக சுதந்திரம் எங்கு உள்ளது என்ற கேள்வியை நாம் ஆசிரியர்பீடத்திலேயே கேட்க வேண்டும். அதற்கான விடை அங்கிருந்தே கிடைக்கும்’ என்றார்.
Related posts:
|
|