இலங்கையின் உள்விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை!  ரஷ்யா!

Friday, July 1st, 2016

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை ரஷ்யா விமர்சித்துள்ளதுடன் அதில் சர்வதேச சமூகம் தலையிடக் கூடாது எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ரஷ்ய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை சம்பந்தமான யோசனையை ரஷ்யா எதிர்த்தது. 2009ம் ஆண்டு இலங்கை போரில் தலையிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த யோசனையை சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: