இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் -அமைச்சர் சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

Sunday, January 31st, 2021

இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பிழையான குற்றச்சாட்டுகளை கொண்டது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது ஜனாதிபதிக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் இது தவறு. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் என்னை குற்றம்சாட்டியுள்ளார், நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். நான் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளையும் இலங்கையில் இரண்டாவது அதிக விருப்புவாக்குகளையும் பெற்றவன். மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவரை அது பிழையான விடயமாக காணப்படுகின்றது.

தற்போதைய நிலைமக்கு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவையே குற்றம்சாட்ட வேண்டும், முன்னைய அரசாங்கத்தின் சார்பில் அவரே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இனை அணுசரணை வழங்கினார் . இது துரோகமான செயற்பாடாகும் என தெரிவித்த அவர்  இலங்கை மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: