இலங்கையின் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் – உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆராய்வு!

Monday, April 22nd, 2024

இலங்கையின் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் வழிகள் குறித்து ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா விவாதித்துள்ளார்.

ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் மற்றும் அவரது குழுவினரை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தோஸ் ஜா சந்தித்தார்.

சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹாராஜால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் இராமாயணப் பாதைத் திட்டத்தின் தொடக்க நிகழ்விலும் சந்தோஸ் ஜா பங்கேற்றார்.

ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையானது அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பொறுப்பில் உள்ள அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: