இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வாழ்த்திய சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் !

Friday, June 17th, 2022

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளிற்கான தனது வாழ்த்துக்களை சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கடிதமொன்றறை அனுப்பி அவர் இதனை தெரிவித்துள்ளார், இது குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவிலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இறப்பர் அரிசி உடன்படிக்கை தன்னிறைவு ஐக்கியம் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வினை சீன அரச தலைவர் குறித்த கடிதத்தில் வலியுறுத்தினார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனா இலங்கைக்கு எப்போதும் உதவ தயார் எனவும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 20 ஆம் திகதி தனது 73 ஆவது பிறந்தநாளை காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: