இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்திற்கு சலுகைக் கடன்வழங்கும் பின்லாந்து !

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நன்கொடைகளையும், சலுகை கடனுதவிகளையும் வழங்க பின்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதற்கான ஒப்பந்தமும் பின்லாந்து வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான பின்லாந்து ஒத்துழைப்பு நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கைக்கும், பின்லாந்துக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் உதவியாக அமைந்தது என்று பின்லாந்தின் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மீக்கா லின்ட்லா தெரிவித்துள்ளார்
Related posts:
களஞ்சியத்தில் 1,732,682 கிலோக்கிராம் நெல் இருப்பு!
இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
வளிமண்டலத்தில் தளம்பல் நிலை: மழைக்குச் சாத்தியம்
|
|