இலங்கையிடம் நிதி பெற்ற வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்!

Friday, July 20th, 2018

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நிதிபெற்ற குற்றத்துக்காக, வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் பொதுசபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு இலங்கைக்கு தனிப்பட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போது அவர் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 10 லட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனை அவர் மறுத்து வந்தார்.

எனினும் அந்த நாட்டின் நாடாளுமன்றக் குழு மேற்கொண்ட விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை 10 தினங்களுக்கு நாடாளுமன்ற பதவியில் இருந்து ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: