இலங்கையர்கள் மலேசியாவுக்குள் பிரவேசிக்கத் தடை!

Thursday, May 6th, 2021

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவரல் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கையர்கள் மலேசியாவுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் புதன்கிழமைமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தடையை மலேசிய அரசு விதித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாட்டவர்கள் வருவதற்கும் நேற்றிலிருந்து மலேசிய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு மலேசியா தடை விதித்திருந்த நிலையில், நேற்று முதல் மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் இணைந்ததாக இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: