இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!

கட்டார் நாட்டின் நெருக்கடி காரணமாக இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் அந்நாடு உணவை களஞ்சியப்படுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். ராஜதந்திர மட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எந்த சிக்கலும் இல்லை. அந்நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டுமானால், அது தொடர்பாக தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
ஏதாவது சிக்கல் இருப்பின் அவர்களை அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்கு சொந்தமான விமானங்களும் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களும் சேவையில் ஈடுபடுவதால் அது தொடர்பில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|