இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு – உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுப்பு!

Saturday, January 22nd, 2022

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 2000 வீட்டு அலகுகள் இதற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் ஊட்டச்சத்து நிலை குறித்த கணக்கெடுப்பு இறுதியாக 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

கடந்த காலங்களில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடு மூடப்பட்டதுடன், நாட்டு மக்களின் போஷாக்கு நிலை தொடர்பில் அதிக மாற்றம் ஏற்பட்டமை தெரியவந்தது. குறிப்பாக நகர மற்றும் தோட்டப்புற வீடுகளில் வாழும் சிறுவர்களினதும் பெரியவர்களினதும் போசாக்கு மட்டம் தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தமை, சுகாதார அமைச்சினால் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது

Related posts: