இலங்கையர்களின் காயங்களை நீதியால் குணப்படுத்த முடியும்- சர்வதேச மன்னிப்புச் சபை!

Sunday, June 25th, 2017

காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை எவ்வித தாமதங்களுமின்றி இலங்கை அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குரநர் பிராஜ் பட்நாய்க் இதனை வலியுறுத்தியுள்ளார். இலங்கையர்களின் காயங்களை நீதியால் மாத்திரமே குணப்படுத்த முடியும்

அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக காத்திருக்கின்றன இந்த நிலையில், அவர்களால் மேலும் நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியாது என்றும் பிராஜ் பட்நாய்க் குறிப்பிட்டுள்ளார்காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தில் பால்நிலை சமத்துவதும் பேணப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Related posts: