இலங்கைப் போக்குவரத்தில் கடுமையாக்கப்படவுள்ள சட்டங்கள்!

பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய அதிக சத்தங்கள், பல்வேறு வர்ணங்களை கொண்ட மின்விளக்குகளுடன் பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பேருந்து மட்டுமன்றி அவ்வாறான முறையில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு இவ்வாறு மேலதிக பகுதிகள் பொருத்துவது தொடர்பில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்பு கூற வேண்டும்.
பல்வேறு சத்தங்கள் வரும் பேருந்துகளை சோதனையிடுவதற்கு இலங்கை முழுவதும் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|