இலங்கைப்  பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் சிறப்பு நிகழ்வுகள்!

Sunday, September 4th, 2016

இலங்கைப்  பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை( 03) யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் 150 ஆவது ஆண்டு தின சிறப்பு நிகழ்வுகள் காலை-8 மணி முதல் யாழ். பொலிஸ் நிலைய முன்றலில் யாழ். மாவட்டப் பிரதிப்பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ குமாரட்ண தலைமையில் இடம்பெற்றது. இதன் போது விசேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

யாழ் .பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டுக் கல்வியங்காட்டினைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட முதியவர் ஒருவருக்கான  வாழ்வாதார உதவித் திட்டத்தை யாழ். மாவட்டப்  பிரதிப்பொலிஸ்மா அதிபர் வழங்கிவைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed

unnamed (1)

unnamed (2)

unnamed (3)

Related posts: