இலங்கைப் பொலிஸ் சேவை  மறுசீரமைப்பு செய்யப்படும் – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Monday, April 2nd, 2018

இலங்கைப் பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விஹாராதிபதி றுஹூணு மஹாம்பத்துவெயின் தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய ஒபவக்க தம்மிந்த தேரரை அமைச்சர் சந்தித்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் பொதுமக்களால் நிராகரிக்கப்படும் இவ்வாறான நடவடிக்கையின் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு அரசாங்கம் எப்பொழுதும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கதிர்காமம் வருடாந்த உற்சவத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. உற்சவத்திற்காக ஆறு கோடி ரூபா செலவாகும் என்று தேரர் சுட்டிக்காட்டினார்.

Related posts: