இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற அனைத்து பரீட்சைகளும் விரைவில் டிஜிட்டல் மயமாகும் – அமைச்சரவையில் தீர்மானம்!

Tuesday, October 27th, 2020

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படுகின்ற பரீட்சை செயன்முறையை நவீனமயப்படுத்த வேண்டுமென அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பிரதானமாக வருடாந்தம் பாடசாலைக் கல்வி தொடர்பான நான்கு  தேசிய பரீட்சைகளையும் 325 நிறுவன ரீதியான பரீட்சைகளும்  நடத்தி வருகின்றது எனவும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது  குறித்த பரீட்சைகளை நடத்துவதில் அதிக பணிகளை திணைக்களத்தின் பணியாளர்கள் பொதுவான அலுவலக முறைகளைக் கையாண்டு மேற்கொள்ளப்படுவதுடன், பரீட்சைகளின் துல்லியத்தையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக பரீட்சை முறையை டிஜிட்டல் முறைமைப்படுத்தலின் தேவை  தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் முகாமைத்துவ செயன்முறையை நவீன மயப்படுத்துவதற்காக தேவையான இணையத்தள வசதிகள் உள்ளிட்ட நவீன தொழிநுட்ப உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் குறித்த பயிற்சிகளை பணியாளர் குழாமைப் பயிற்றுவிப்பதற்கும், பரீட்சை மதிப்பீட்டுச் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக மாகாண மட்டத்தில் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களை நிறுவுவதற்கும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: