இலங்கைத் தேயிலையைப் பரிசோதிக்க புதிய இயந்திரம்!

Friday, February 16th, 2018

இலங்கைத் தேயிலையின் தரத்தைப் பரிசோதிப்பதற்கு புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்த இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் தீர்மானித்துள்ளது.

தேயிலையின் சரியான இரசாயன சேர்மானம் தொடர்பிலான அளவீடுகளை இந்த இயந்திரத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் உதவுவதாக இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் சரன் அபேசிங்கதெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேசத்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை குறித்த இயந்திரத்தின் மூலம் அதிகரிக்க முடியும் எனவும் தேயிலை உற்பத்தியில் அதிகரிப்பைமேற்கொள்ள முடியும் எனவும் சரன் அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: