இலங்கைத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படை கப்பல்கள்!

Saturday, October 8th, 2016

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “Kashima”, “Setoyuki” மற்றும் “Asagiri” ஆகிய மூன்று  கப்பல்கள் நேற்றுமாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் , இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 12ம் திகதி வரையில் குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – ஜப்பானுக்கு கடற்படைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில்குறித்த கப்பல்கள் இலங்கை வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

index-53

Related posts: