இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று !

இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். அந்தவகையில் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை திருநாடு சுதந்திரம் பெற்று தம்மைத் தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் “சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்றன.
காலை 8 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியிருந்தார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|