இலங்கைத் தாக்குதல்: ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைத்து அஞ்சலி!!

Monday, April 22nd, 2019

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்சில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளன.

இதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரியல் மட்ரிட் விளையாட்டு கழகமும் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை முதல் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளில் 218 பேர் உயிரிழந்துள்ளதுடன், 452க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: