இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது

Thursday, April 7th, 2016

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் யாழ் அனலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இந்திய மீனவர்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அளவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டனத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் டோரல் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts: