இலங்கைக்கு 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்ககின்றது அமெரிக்கா!
Thursday, September 22nd, 2022அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கு 7 இலட்சத்து 73 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்படுவதோடு இது இலங்கை ரூபாவில் 279 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும்.
இந்த மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை கையளிப்பதற்கான நிகழ்வு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முன் அறிவித்தலின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு!
"சீன உரத்தில் தான் பிரச்சனை - மாறாக சீனாவுடன் இல்லை" – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட...
யாழ் ஒருங்கிணைப்புக் குழு துரித நடவடிக்கை - வழமைக்கு திரும்பியது காரைநகர் - ஊர்காவற்துறை போக்குவரத்...
|
|