இலங்கைக்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்ககிறது தென்கொரியா !
Friday, June 11th, 2021கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்காக இலங்கைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த மருத்துவ உபகரணங்களில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாகவும் தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 ஒழிப்பிற்கான நடவடிக்கைகளின் போது இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாகவும் தென்கொரிய தூதுவர் உறுதியளித்துள்ளார்.
முன்பதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்கொரியாவினால் இலங்கைக்கு 3 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இடைக்கால கணக்கறிக்கை நாளை - அகில விராஜ் காரியவசம்!
தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்கள் மத்தியவங்கியால் அறிவிப்பு!
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
|
|