இலங்கைக்கு 150 மில்லியன் கடன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி – கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும், தடுப்பூசி தகவல், விநியோகம் மற்றும் கண்காணிப்பு முறைகளை மேம்படுத்தவும் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு விரைவான மற்றும் சமமான தடுப்பூசிகளை வழங்குவதற்காக 2020 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட 9 பில்லியன் ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் ஒரு பகுதியாக இந்த கடன் இலங்கைக்கு கிடைக்கிறது.

கோவிட் தொற்றுநோய் இலங்கையின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது, இது சேவைத்துறை மற்றும் சுற்றுலாவை மிகவும் பாதித்துள்ளது என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா கூறியுள்ளார்.

தமது வங்கியின் இந்த உதவி இலட்சக்கணக்கான இலங்கையர்களை கொவிட் இலிருந்து பாதுகாக்கவும், அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்தவும் உதவும்.

இது தொற்றுநோயை சமாளிக்கவும், நிலையான பொருளாதார மீட்சியை அடையவும் நாட்டிற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் சுமார் 40 லட்சம் இலங்கையர்களுக்கு நோய்த்தடுப்பு ஊசிகளை கொள்வனவு செய்ய உதவுவதுடன் 2023 க்குள் 80% தடுப்பூசி எட்டுவதற்கான செலுத்தல் என்ற இலங்கை அரசாங்கத்தின் இலக்குக்கு உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: