இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் இந்தியா – எதிர்வரும் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம்!

இலங்கைக்கு சுமார் 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் இந்தியா இவ்வாறு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இதன் முதல்கட்டமாக இந்த மாதம் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்க உள்ளது. அந்நிய செலாவணி பரிமாற்ற அடிப்படையில் 400 மில்லியன் டொலர்களும், கடனுதவி அடிப்படையில் 500 மில்லியன் டொலர்களும் இந்த மாதம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
எரிபொருள் கொள்வனவு மற்றும் உணவு, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் மாவட்டத்தில் 325 ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை!
சீனப் பெண் இலங்கையில் கைது!
பேருந்துக்காகக் காத்து நின்ற குடும்பப் பெண்ணொருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
|
|