இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இத்தாலி!

Thursday, October 28th, 2021

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக இத்தாலிக்கு வருபவர்கள் பட்டியல் E நிலைக்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்படாது என இத்தாலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, புதிய விதிகளின் அடிப்படையில், ஒக்டோபர் 26 முதல், பிரேசில், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலியை அடையும் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க  சுகாதார அமைச்சகத்தின் அங்கீகாரம் வழங்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வேலை, உடல்நலம் மற்றும் படிப்பு தொடர்பான காரணங்களுக்காக இத்தாலிக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கூடுதலாக, ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காக இத்தாலிக்குள் நுழைய வேண்டியவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இத்தாலிய சுகாதார அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, கடந்த 14 நாட்களில் நான்கு நாடுகளில் ஒன்றில் தங்கியிருந்தாலோ அல்லது பயணித்த பின்னாலோ இத்தாலிக்குத் திரும்பும் நபர்கள், அங்கு நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறையான கொரோனா சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் டிஜிட்டல் பயணிகள் இருப்பிடப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அவர்கள் வருகை குறித்து சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: