இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள் – உலக நாடுகளுக்கு மாலைதீவின் சபாநாயகர் அழைப்பு!

Saturday, June 15th, 2019

மாலைதீவின் சபாநாயகர் மொஹமட் நஷீட் உலக நாடுகளைச் சேர்ந்த மக்களை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புகிணங்க மாலைதீவின் சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளனர்.
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டபோதே அவர் குறித்த அழைப்பினை விடுத்துள்ளார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடான ஃபைசல் நசீம் உட்பட உயர் மட்ட மாலத்தீவு பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த தூதுக்குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாலத்தீவு ஆளும் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரும் அடங்குகின்றனர்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினதன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் மாலைதீவு தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் மாலைதீவு தூதுக்குழுவிற்கு விமான நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரியந்த கரியப்பெருமா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஒற்றுமையைக் காட்ட இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கூறிய முகமது நஷீத், இலங்கைக்கு இடம்பெற்ற பேரழிவு தங்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவாக தாம் கருதுவதாக கூறியுள்ளார்.
அதோடு , தனது சுற்றுப்பயணத்தின் நோக்கம் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: