இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா!

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகைதந்தவர்களில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய இலங்கைக்கான முதல் சுற்றுலா பயணிகள் விமானம் உக்ரேனில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!
அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் - மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர்!
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர...
|
|