இலங்கைக்கு வந்த உலகின் மிகப்பெரிய கப்பல்!
Tuesday, April 4th, 2017உலகின் முகப்பெரிய மோட்டார் வாகன போக்குவரத்து கப்பல் இலங்கை வந்துள்ளது.இலங்கை கப்பல் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டுவகையில் இது அமைந்துள்ளது.
“Hoegh Trigger” என்ற இந்த கப்பல் அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நோர்வே, ஒஸ்லோவை சேர்ந்த Hoegh Autoliners என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்த நிலையில் அதன் உள்ளூர் பிரதிநிதியாக Diamond Shipping Services (Pvt) Ltd நிறுவனம் செயற்பட்டுள்ளது.14 தட்டுகளை கொண்ட இந்த கப்பல் ஒரு தடவையில் 8500 மோட்டார் வாகனங்களை காவி செல்லும் திறனை கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
பெரும்போகத்தில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க 200 மெட்ரிக் தொன் சோள விதைகள்!
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி அர்ப்பணிப்பை காட்டவில்லை - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உற...
|
|