இலங்கைக்கு வந்துள்ளது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!

Wednesday, April 18th, 2018

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏ.என்.225 ரக விமானம் இன்று(18) காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மலேஷியா கோலாலாம்பூரில் இருந்து பாகிஸ்தான் கராச்சி நகரிற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற போதே மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பல் மற்றும் பணியாளர்களின் தேவை காரணமாக தரையிறக்கப்பட்டுள்ள குறித்த விமானம், நாளை காலை மீண்டும் கராச்சி நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்த விமானத்தில் 2 லட்சம் மெற்றிக் டொன் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

image

Related posts: