இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் – எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை!
Monday, August 28th, 2023இன்று திங்கட்கிழமை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த 10 நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பகிடிவதை தொடர்பில் முறையிட மாணவர்களுக்கு வாய்ப்பு!
அரியாலை துப்பாக்கிச் சூடு: வாகனங்களை விடுவிப்பதற்கு யாழ்ப்பாண நீதிமன்று மறுப்பு!
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கை புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்கவில்லை!
|
|