இலங்கைக்கு மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பெற்றுள்ளன!

சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் சீன மக்கள் இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சீனோபோர்ம் தடுப்பூசிகளுமே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இதற்கமைய இந்த மாதத்தில் மாத்திரம் 18 மில்லியன் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகளவில் சீனோபோர்ம் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு டக்ளஸ் தே...
இந்திய பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைக்கவுளோம் - கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்
கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில்!
|
|