இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கும் – சீனத் தூதரகம் தெரிவிப்பு!

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளைமறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றுவரை 84 இலட்சத்து 39 ஆயிரத்து 469 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் 66 இலட்சத்து 93 ஆயிரத்து 72 பேர் முதலாவது தடுப்பூசிகளை மாத்திரம் செலுத்தி கொண்டவர்கள் எனவும் தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 இலட்சத்து 46 ஆயிரத்து 397 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோருக்கு சைனோபாம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி 62 இலட்சத்து 65 ஆயிரத்து 371 சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய 49 இலட்சத்து 19 ஆயிரத்து 323 பேர் சைனோபாம் முதலாம் தடுப்பூசியையும், 13 இலட்சத்து 46 ஆயிரத்து 48 பேர் சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|